2021 வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்யும் நிகழ்வு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பேலட்யூனிட், கண்ட்ரோல்யூனிட் ஆகியவைகளை சரியாக இயங்குகிறதா என பரிசோதனை செய்தார்.
இந்த சோதனை பஸ்ட்லேவெல் செக்கிங் FLC முறையாகும்.
இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட கழக வழக்கறிஞர் பிரிவினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.