இந்திய அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், திருச்சி மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் Dr. B.R. அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக
18 ஆம் ஆண்டு இளையோர் வார விழா, தமிழர் திருநாள், திருவள்ளுவர் தினம், ஆகிய முப்பெரும் விழாவில், உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு, மாணவர்கள் கடிதம் எழுதி அனுப்பும் நிகழ்ச்சியை உலக சாதனையாக அங்கீகரித்தது.
ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் ஜெட்லி மற்றும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் பக்கிரிசாமிக்கு உலக சாதனைக்கான கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கினார்கள்.