பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநில மாநாடு வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது.
அதற்கான ஆலோசனை கூட்டத்தை தமிழகம் முழுவதும் பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக திருச்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்த இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ் தெரிவிக்கையில்,
தமிழகத்தில் வேல் யாத்திரையால் மாபெரும் புரட்சி எழுந்துள்ளது. அதிலும் வேல் யாத்திரையின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு தைப்பூசத் திருவிழாவை அரசு விடுமுறையாக அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இத்திருவிழாவை அரசு விடுமுறையாக அறிவித்த தமிழக முதல்வருக்கு அரசு நன்றி தெரிவித்து கொள்வதாகவும்,
ரத யாத்திரை மூலம் திராவிட கட்சிகளின் பொய்களையும், அவர்களின் பொய் முகத்திரைகளை கிழித்து மாபெரும் வெற்றியைத் தேடித் தந்துள்ளது.
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சட்டமன்றம் கட்டுவதற்கு பல்லாயிரம் கோடி செலவிட்ட போது பேசாத ஸ்டாலின், தற்போது மத்திய அரசு புதிய நாடாளுமன்றம் கட்ட நிதி ஒதுக்கியுள்ளதையும். அதை விவசாயிகளுக்கு இருக்கலாமே என்று விமர்சிப்பதும், கேள்வி எழுப்புவதும் ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
வருகின்ற பிப்ரவரி 6ம் தேதி பாஜக மாநில இளைஞரணி சார்பாக இளைஞர் எழுச்சி மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இளைஞர்களை ஒன்று சேர்த்து பாஜகவின் சாதனைகளை தேர்தல் பிரச்சாரமாக நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த இளைஞர் அணி மாநாட்டிற்கு பிரதம மந்திரி நரேந்திர மோடியை சிறப்பு அழைப்பாளராக அழைக்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சியில் உள்ள பாஜக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.