திருச்சி அரசு தலைமைப் பொது மருத்துவ மனைக்கு குழந்தைகள் இருதய சிகிச்சை மையத்துக்கு எக்கோ கருவியை திருச்சி சிவா.எம்.பி. வழங்கினார்.
திருச்சி காந்தியடிகள் அரசு தலைமை பொது மருத்துவ மனையில் குழந்தைகள் இருதய சிகிச்சைப்பிரிவில் , குழந்தைகளின் இருதயக் கோளாறுகளை கண்டுபிடிக்கும் எக்கோ மெஷின் இது வரை இல்லாமல் இருந்தது.
இதை அறிந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தனது மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ16 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.
பிலிப்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்ட இந்தக் கருவியினை அரசுப் பொதுமருத்துவ மனையில் ஒப்படைத்து திருச்சி சிவா எம்.பி இக்கருவியை தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு,டீன் வனிதா, டாக்டர் மைதிலி மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.