திருச்சி தில்லை நகரில்
ஓய்வு பெற்ற டிஎஸ்பி மகள் திடீர் மாயம்.
கடத்தலா? போலீஸ் விசாரணை .
திருச்சி கருமண்டபம் நட்சத்திர நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் ஓய்வு பெற்ற காவல்துறை டிஎஸ்பி . இவரது மனைவி மீனாட்சி ஆசிரியை இவர்களது மகள் கௌரி (வயது 19.
) இவர் திருச்சி தில்லைநகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள தனியார் அகாடமிக்கு ஆட்டோவில் சென்றார் பின்னர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை உடனே கௌரியின் பெற்றோர் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர் ஆனால் கௌரியின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
மேலும் பல இடங்களில் தேடியும் கௌரி குறித்து எந்த தகவலும் இல்லை உடனே இது குறித்து கௌரியின் தாய் மீனாட்சி தில்லை நகர் போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் வழக்குப் பதிந்து மாயமான கௌரி கடத்தப்பட்டாரா? அல்லது வேறு எங்கும் சென்று விட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
திருச்சியில் ஓய்வு பெற்ற டிஎஸ்பி மகள் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.