திருச்சியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் ஆறாவது மாவட்ட மாநாடு நடைபெற்றது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் தமிழ்நாடு நெடுஞ்சாலை தொழிற்சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் ஆறாவது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1) சாலைப் பணியாளர்களின் 41 மாத காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்
2)பணி நீக்க காலத்தில் இறந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு வாரிசு பணி வழங்கவேண்டும்.
3) 338 அரசு ஆணைப்படி தொழில்நுட்ப ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்
4) சாலைப் பணியாளர்கள் காலியாக உள்ள பணியிடங்களை கிராமப்புற இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார்,
மேலும் மாநில துணைத் தலைவர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் இளங்கோவன், சக்திவேல் சௌந்தர் மலர்மன்னன் செயற்குழு உறுப்பினர்கள் பிரான்சிஸ் சண்முகம், மகேந்திரன், மற்றும் விவேகானந்தன், பழனிச்சாமி, சுந்தர்ராஜ், மாநில பொது செயலாளர் ஆனந்தராஜ்,சண்முகம், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்..