திருச்சியில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பாமகவினர் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை.
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வேண்டியும் மற்றும் அனைத்து சாதினருக்கும் இடஒதுக்கீடு கோரி திருச்சி கோர்ட்டு (வஉசி சிலை) அருகிலிருந்து பேரணியாக புறப்பட்டு மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கும் அறப்போராட்டம் பாமக சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் ஸ்ரீதர், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்
பி.கே.திலீப்குமார் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் முன்னிலை வகித்தார்.மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் சரவணன், மாநகர் மாவட்ட தலைவர் வினோத், சரவணன், மாநில துணைத் தலைவர்கள் உமாநாத், மணிமாறன், மாவட்ட அமைப்புச் செயலாளர் எழில் அரசன், ரசாக் பாய் ரபீக், வெங்கடேஷ்,விஜி, பிரவீன், கோவை சுரேஷ், அசோக், ஏர்போர்ட் பிரசாந்த், சக்தி, ரவி, ரங்கா.ரமேஷ், கிருஷ்ணமூர்த்தி மலைக்கோட்டை வீரமணி, செந்தில் உள்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பா.ம.க. நிர்வாகிகள் பேரணியாக நடந்து வந்தனர். அதைத்தொடர்ந்து அனைத்து சாதி மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் கல்வி அனைத்திலும் சமமான வசதி வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள் அதை தொடர்ந்து அவர்கள் பேரணியாக வந்து கொண்டிருக்கும் பொழுது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மாநகராட்சி அலுவலகம் முன்பாக பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூறியதாவது:- தொடர்ந்து எங்கள் சமுதாயத்திற்கும் எங்கள் மக்களுக்கும் அநீதியை நிலைக்கும் விதமாக அரசு செயல்பட்டு வருகின்றது ஆகவே இந்த நிலையை எங்கள் பாமக சார்பில் கண்டிக்கிறோம் மேலும் இந்த நிலை நீடித்துக் கொண்டே இருந்தால் பல்வேறு அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர், பின்னர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக முற்றுகையில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு வந்தவர்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர் அதைத் தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மாநகராட்சி வாசல்கள் பூட்டப்பட்டிருந்தது. இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.