முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு நாள் தேர்தல் பிரச்சாரம் மற்றும் முக்கியஸ்தர்கள் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இதில் ஒரு நிகழ்ச்சியாக கிறிஸ்தவ சிறுபா
திருச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு நாள் தேர்தல் பிரச்சாரம் மற்றும் முக்கியஸ்தர்கள் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இதில் ஒரு நிகழ்ச்சியாக கிறிஸ்தவ சிறுபான்மை அமைப்பின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார்.
இதில் திருச்சி ஜே கே சி அறக்கட்டளை நிறுவன தலைவரும், கிறிஸ்தவ சுயாதீன திருச்சபைகள் ஐக்கிய பேரவை ஐசிஎப் பேராயம் பேராயர் ஜான் ராஜ்குமார், மாநில செயலாளர் ராஜன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் மற்றும் நிர்வாகிகள் தமிழக முதல்வரை நேரில் சந்தித்தனர்.
அப்போது சிறுபான்மை கிறிஸ்தவ மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் நல்ல திட்டங்களுக்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் ஆதரவு அதிமுகவுக்கு தான் எனவும் எடுத்துக் கூறினர்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மண்டல பொறுப்பாளர் வைத்தியலிங்கம், திருச்சி மாநகர மாவட்ட செயலாளரும் சுற்றுலாத் துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன்,
கழக அமைப்புச் செயலாளரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான வளர்மதி
மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.