திருச்சி விமான நிலையத்தில் சாலை அகலப்படுத்தும் பணி
ஆக்கிரமிப்புகள் அகற்றம்.
பொதுமக்கள் சாலை மறியல்.
அதிகாரிகள் பேச்சு வார்த்தை
திருச்சி புதுக்கோட்டை சாலை அகலப்படுத்தும் பணிக்காக டிவிஎஸ் டோல்கேட் முதல் மாத்தூர் அருகே உள்ள 10 கி.மீ. சுற்றுவட்ட சாலை வரை உள்ள சாலையின் இருபுறங்களிலும் அகல படுத்துவது என முடிவு செய்து அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே மாத்தூர் சுற்றுவட்ட சாலை முதல் குண்டூர் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நிறைவு பெற்றுள்ளது.
இந்தநிலையில் நேற்று காலை 9 மணி முதல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து திரு வளர்ச்சிபட்டி வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அதிகாரிகள் ந காலை பணியினை தொடங்கினர்.
அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் சுமார் 100 பேர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மேலும் அவகாசம் தேவை என கேட்டுக்கொண்டனர்.
அதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்க முடியாது எனக் கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை துவக்கினார். சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள பிள்ளையார் கோயிலில் காம்பவுண்ட் சுவர், பென்ஷனர் காலனியில் உள்ள இயேசு சிலை, மற்றும் பல கடைகள், பல வீட்டுக் காம்பவுண்ட்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் அகற்றப்பட்டன.
இதனால் பொதுமக்கள் திருச்சி புதுக்கோட்டை சாலையில் (விமான நிலையம் அருகே புதுத்தெரு ) சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் பழனிக்குமார் காவல் துறை அதிகாரி பவன் குமார் தலைமையில் சுமார் 100 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் இரண்டுநாள் அவகாசம் வழங்குவது என முடிவு செய்து கூட்டத்தை கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து
சாலைமறியல் கைவிடப்பட்டது
இந்த ஆக்கிரமிப்பு மீட்பு பணி மீண்டும் நாளையும் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் கூறினர்.
இதனால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மாற்று இடம் வழங்காமல் ஆக்கிரமிப்புகளை நடத்தக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 6 மணி நேரம் பரபரப்பு நிலவியது.
இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மேலும் உதவி கோட்ட பொறியாளர் ராஜ், உதவி கோட்ட பொறியாளர் லோகநாயகி மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் 10 பொக்லைன் இயந்திரங்கள் உடன் ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.