சாலை விரிவாக்கத்திற்காக குடியிருப்புகளை அகற்ற நெடுஞ்சாலைதுறை முடிவு – பொதுமக்கள் உண்ணாவிரதம்!!
சாலை விரிவாக்கத்திற்காக குடியிருப்புகளை அகற்ற நெடுஞ்சாலைதுறை முடிவு – பொதுமக்கள் உண்ணாவிரதம்!!
திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எம்ஜிஆர் நகர் மற்றும் ஜெயலலிதா நகர் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை அகற்ற முடிவு செய்துள்ளனர்.
இப்பகுதி மக்களுக்கு அரசாங்கம் சார்பில் மாற்று இடமாக திருச்சி மணிகண்டம் அருகே குடிசை மாற்று வாரிய கட்டடத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை ஏற்க மறுத்த அப்பகுதி மக்கள் தங்களுக்கு நிலமாக தான் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும், அரசு அதிகாரிகள் சார்பில் நேற்று அப்பகுதியில் குடிசை மாற்று வாரிய கட்டிடத்திற்கு டோக்கன் வழங்கியபோது ஒரு சிலர் மட்டுமே வாங்கி கொண்டனர். பலர் டோக்கனை வாங்காமல் அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இன்று கொட்டும் மழையிலும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.