அருமையான சுவையில் மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ஆக உருளைக்கிழங்கு லாலிபாப் தயார் செய்து கொடுத்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 1 கப் (வேக வைத்து துருவியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
மைதா – 3 டேபிள் ஸ்பூன்
பிரட் தூள் – 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
சாட் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
டூத் பிக்ஸ்- தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் வேக வைத்து துருவிய உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள், சாட் மசாலா, எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, 1 டேபிள் ஸ்பூன் மைதா, 1 கப் பிரட் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் அதை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு சிறிய பௌலில் மைதா, உப்பு மற்றும் சிறிது நீர் சேர்த்து ஓரளவு நீர் போன்று கலந்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அதே சமயம் ஒரு தட்டில் பிரட் தூளை போட்டுக் கொள்ளுங்கள்.
அதன் பின் உருட்டி வைத்துள்ள உருண்டையை மைதாவில் பிரட்டி, பின் பிரட் தூளில் பிரட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் சூடானதும், உருட்டி வைத்துள்ளதை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
இறுதியில் டூத் பிக்கை ஒவ்வொரு உருண்டையிலும் செருகினால், உருளைக்கிழங்கு லாலிபாப் தயார்.