தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக்கணக்கு குழு 2018 – 2021 ஆய்வுக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடை பெற்றது.
பொது கணக்கு குழு தலைவர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் அன்பில்மகேஸ் பொய்யாமொழி,
தா.உதயசூரியன், ஸ்டாலின் குமார், சௌந்தரபாண்டியன், நடராஜ் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அப்போது பேசிய துரைமுருகன்,
கணக்கு வழக்கு சரியில்லை என்றால் Suspend செய்யவும்,
கணக்கு முறைகேடு கண்டறியப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ, மேலும் சிறைக்கு அனுப்பும் அதிகாரம் இந்த குழுவிற்கு உள்ளது.
எனவே குழு எழுப்பும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் அதிகாரிகள் மழுப்பலான பதில்களை கூறக் கூடாது. நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் சரியான பதிலை கட்டாயம் கூறியே ஆக வேண்டும்.
பொதுப்பணி அமைச்சராக 16 ஆண்டு காலம் பணியாற்றி உள்ளேன். புகாருக்கு உள்ளாகும் ஊழியர்கள் அலுவலர்களை
இதுவரை யாரையும் நான் சஸ்பெண்ட் செய்ததில்லை என்றார்.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட திருச்சி தெற்கு மாவட்டகழக பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில்மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது மாவட்டத்திற்கு உட்பட்டதிருவெறும்பூர் தொகுதி நவல்பட்டு ஊராட்சியில் அண்ணா நகரில் அமைந்துள்ள சாட்டிலைட் சிட்டியில் கழிவுநீர் வடிகால் துரிதமாக அமைத்துத்தர வேண்டும்
திருவெறும்பூர் ஒன்றியம் குவளக்குடி பஞ்சாயத்து வீதிவடங்கம் கிராமத்தில் காவிரி நீர் இணைப்பு திட்டமானது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் குழாய்கள் அமைக்கப்பட்டு இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது இதனை குடிநீர் வடிகால் வாரியம் உடனே அமைத்து குடிநீர் வழங்க ஆவண செய்ய வேண்டும்.
சர்வீஸ் ரோடு அமைப்பதற்கு கோர்ட் அளித்துள்ள தீர்ப்பின்படி நிலங்களை உடனடியாக கையகப்படுத்தி சர்வீஸ் ரோடு விரைவாக அமைத்துத்தர ஆவன செய்ய வேண்டும்
மணப்பாறை தொகுதியில் வையம்பட்டி பகுதியில் விளையக்கூடிய பூக்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைத்துத்தர ஆவன செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்தார்.
இதைத்தொடர்ந்து இந்த குழுவினர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் கட்டுமான பணி, கீழ புலி வார்டு ரோடு, சிறார் சிறை கட்டுமானப் பணிகள், திருச்சி மத்திய சிறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மகளிர் விடுதி, வேளாண் கல்லூரி ஆகியவற்றை பார்வையிட்டனர்.