கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நள்ளிரவு
மத வழிபாடுகள் நடத்த கிறிஸ்தவ ஆலயங்கள், திருச்சபைகளுக்கு அனுமதி வழங்கக் கோரி தமிழக முதவருக்கு கோரிக்கை.
திருச்சி மண்டல கிறிஸ்தவ சுயாதீன திருச்சபைகள் ஐக்கிய பேரவை செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
பேரவைத் தலைவர்/பேராயர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.
மாநிலச் செயலர் பாஸ்டர் A.ராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பார் பேராசிரியர் Rev. Dr. C.அருள் வரவேற்புரை ஆற்றினார். மாநிலச் செயலர் ஜான் பிராங்கிளின், மாவட்ட இணைச் செயலர் பாஸ்டர் A.சகாயராஜ், A.இம்மானுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட செயலர் பாஸ்டர் S.ஜான் டோம்னிக் நன்றி கூறினார்.
செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விபரம்:
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு 2021 நள்ளிரவு மத வழிபாடுகள் நடத்த கிறிஸ்தவ ஆலயங்கள், திருச்சபைகளுக்கு அனுமதி வழங்கக் கோரி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கோரிக்கை (அரசு விதிகளை கடைப்பிடித்தல்)
2. ஐ.சி.எப். பேராயம் ஜே.கே.சி. அறக்கட்டளை சார்பாக 31வது சமத்துவ கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
3. சட்டமன்ற தேர்தலில் ஐ.சி.எப் பேராயம் நிலைப்பாடு,மாநாடு 2021 ஜனவரி 21-ந் தேதி நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.