மதசார்பற்ற கூட்டணியில் இடம் பெறாவிட்டால் தனித்து போட்டி.
அ.இ.மஜ்லிஸ் கட்சி முடிவு
அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தென் மண்டல செயற்குழு கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் இக்பால் தலைமையில் நடைபெற்றது
மாநில கமிட்டி ரஹமத்துல்லா தையூப் முன்னிலை வகித்தார்
மாநில தலைவர் டி.எஸ். வக்கில் அஹமத் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் ஜனவரியில் தேசிய தலைவர் பாரிஸ்டர் அசாதூத்தின் உவைஸி வருகை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது
கூட்டத்தில் கீழே குறிப்பிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குடி உரிமை திருத்த மசோதவை எதிர்த்து போராட்டங்கள் நடத்திய தேச மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்
,
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைஏற்படுத்தி வரும் விவசாயிகள் போராட்டத்திற்க்கு ஆதரவு தெரிவிப்பது,
மழை நீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்,
தேசிய குடி உரிமை சட்ட திருத்த மசோதாவை ஜனவரியில் அமல்படுத்தப்படும் என்ற மத்திய பா.ஜ.க அரசின் நடவடிக்கை கண்டித்து மதசார்பற்ற கட்சிகளை ஒன்று சேர்த்து மாபெரும் போராட்டம் நடத்துவது,
20 21 – சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக மதசார்பற்ற கூட்டணிகள் ஓர் அணியில் போட்டியிட விரும்புகிறது.
அ.இ.மஜ்லிஸ் கட்சிக்கு உரிய அங்கிகாரம் கொடுக்காத பட்சத்தில் தமிழகத்தில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் கண்டு தனித்து போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் இம்தியாஸ், காதர், மஜித், முஜிபுர் ரகுமான், இனாயத்துல்லா ஷரிப்,,அகமது மீரான், த சுல்தான் திருச்சி மாவட்ட தலைவர் அலாவுதீன், கிழக்கு மாவட்டம் காஜா, மேற்கு மாவட்டம் ஜாபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.