திருச்சி கேர் அகாடமியில் பயின்று அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் பிடித்தவர்களுக்கு பாராட்டு விழா.
திருச்சி கேர் அகாடமியில் பயின்று அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் பிடித்தவர்களுக்கு பாராட்டு விழா.
அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்த கேர் அகாடமி மாணவர்களுக்கு பாராட்டு விழா
திருச்சி கேர் அகாடமியில் இந்த ஆண்டு நீட் மருத்துவ கலந்தாய்வின் மூலம் மருத்துவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டமைய மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. இந்த ஆண்டு நீட் நூழைவுத்தேர்வில் வெற்றிப் பெற்று கலந்தாய்வு மூலம் மருத்துவ கல்லூரிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு மைய இயக்குனர் பேராசிரியர் முத்தமிழ் செல்வன் தலைமை வகித்து பேசுகையில், இந்த ஆண்டு நமது மையத்திலிருந்து 9 மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரிக்கு நீட் மூலம் தேர்வாகி உள்ளனர். கரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொண்டு வெற்றிப் பெற்றுள்ளனர். இம்மையத்தில் பயின்ற பெரியமுத்து கோவை அரசு மருத்துவ கல்லூரியிலும், தாரணிகா தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியிலும், சபீதா திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியிலும், யோகேஸ்வரி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியிலும், ஜீவிகா மற்றும் சுருதி ஆகியோர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியிலும், சின்னதுரை கோவை ஈஎஸ்ஐ மருத்துவ லூரியிலும், ஆர்த்தி சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துவ கல்லூரியிலும், பிளெஸ்சி மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரியிலும் சேர்ந்துள்ளனர். இதேபோல், ஜெஇஇ நுழைவுத்தேர்வு மூலம் இம்மைய மாணவர்கள் கணேஷ், ஸ்ரீராம் கணேஷ் ஆகிய இருவரும் திருச்சி என்ஐடியிலும், 99.1 சதவீத மதிப்பெண்கள் பெற்ற கெஸியா ஜார்கண்ட் மாநிலம் ராய்ப்பூர் என்ஐடியிலும் தேர்வாகி உள்ளனர் என்றார். ஆசிரியர்கள் கிருஷ்ணவேணி, டாக்டர் சுகந்தி, மீனாட்சி, சங்கர் கணேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். நிகழ்ச்சியில் திரளான மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர்.