திருச்சி விமான நிலையத்தில் 8.5 கிலோ தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் 8.5 கிலோ தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் துபையிலிருந்து நூதனமுறையில் கடத்தி
வரப்பட்ட 8.50 கிலோ தங்கம் பறிமுதல்.
துபையிலிருந்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ. 4.25 கோடியிலான 8.50 கிலோ தங்கம் திருச்சி விமான நிலையத்தில் நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவுக்கு (டிஆர்ஐ) கிடைத்த தகவலின்பேரில்
துபையிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு இண்டிகோ விமானத்தில் வந்த பயணிகளிடம் கோவையைச் சேர்ந்த மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் மற்றும் திருச்சி சுங்கத் துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த ஜொகிந்தர்சிங், கஞ்சன் சையது இப்ராகிம், முகைதீன் அகமது, கேரளம் கோழிக்கோட்டைச் சேர்ந்த நிடும் ப்ராத், ராமநாதபுரத்தைச் சேர்ந்த சையது அபுதாகிர், இளையான்குடியைச் சேர்ந்த கஞ்சன் அஜ்மல்கான், மற்றும் இரு பெண்கள் உள்ளிட்ட 8 பேர் பசை வடிவிலான ரூ. 4.25 கோடி மதிப்புள்ள சுமார் 8. 5 கிலோ தங்கத்தை தங்களது ஆடைகளுக்குள் நூதன முறையில் மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் அனைவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் இதற்கு முன் சுமார் 10 கிலோ அளவில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.