துறையூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு கண்ணனூர் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் சேனை பெர.செல்வம் தலைமையில் நினைவஞ்சலி செலுத்தினர். மாவட்ட இணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இந்திரா காந்தி, எம்ஜிஆர் மன்ற வடக்கு மாவட்ட செயலாளர் அறிவழகன் விஜய், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் ராமஜெயம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்