திருச்சியில் பல்வேறு வழக்குகளில் சிக்கியவன் குண்டர் சட்டத்தில் அடைப்பு .
திருச்சியில் பல்வேறு வழக்குகளில் சிக்கியவன் குண்டர் சட்டத்தில் அடைப்பு .
பல்வேறு செயின் பறிப்பு மற்றும் ஆள்கடத்தல் வழக்குகளில் சம்மந்தப்பட்ட கொள்ளையன் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஆம்னி பஸ் புரோக்கராக வேலை பார்த்து வரும் ஆரோக்கியராஜ் (வயது 56) த/பெ அமிர்தம்பிள்ளை என்பவர் கடந்த 01.11.20-ம் தேதி திருச்சி கலெக்டர் ஆபீஸ் ரோடு, T.B.மருத்துவமனை ரோடு சந்திப்பில் தனது நண்பருடன் நின்றுகொண்டிருந்த போது குமார் 25 வயது மதிக்கதக்க 3 நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து வாதியை கத்தி முனையில் கொலை மிரட்டல் விடுத்து வாதியின் சட்டை பையில் இருந்த பணம் ரூ.2000/-த்தை பறித்துக் கொண்டு சென்றுவிட்டதாக கொடுத்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலைய குற்ற எண். 987/2020 U/s 392 R/w 397 & 506(ii) IPC பிரகாரம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேற்படி தனிப்படையினர் புலன் விசாரணை செய்து மேற்படி வழக்கில் வழிபறியில் ஈடுபட்ட திருப்பதி (வயது 23) த/பெ. முருகேசன், பாண்டமங்கலம் உறையூர், பிரகாஷ் (வயது 26), த/பெ கருணாகரன், கீழகல்கண்டார்கோட்டை, கிஷோர் குமார் (வயது 23), த/பெ.சுப்பிரமணியன் பொய்யாமணி, குளித்தலை, கரூர் மாவட்டம் ஆகியோர்களை கடந்த 02.11.2020 அன்று கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் விசாரணையில் இவ்வழக்கின் எதிரி பிரகாஷ் அமர்வு நீதிமன்ற குற்றப்பிரிவு காவல் நிலைய குற்ற எண் 60/2020 U/s 392 IPC, வழக்கிலும் அரியமங்கலம் காவல் நிலைய குற்ற எண். 588/2020 U/s 379 IPC வழக்கிலும் மற்றும் கண்டோன்மெண்ட் சட்டம் ஒழுங்கு காவல் நிலைய குற்ற எண். 983/2020 U/s 364(A) IPC வழக்கிலும் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
எனவே, எதிரி பிரகாஷ் என்பவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அவர்கள் கொடுத்த அறிக்கையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் மேற்படி பிரகாஷ் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்
அதன் பேரில் திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் பிரகாஷ் என்பவருக்கு இன்று (03.12.2020) குண்டர் தடுப்பு காவல் ஆணை சார்வு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டது.