திருச்சியில் ரேஷன் கடைகளில் 5 கிலோ கொண்டகடலை இன்று முதல் வினியோகம்.
திருச்சியில் ரேஷன் கடைகளில் 5 கிலோ கொண்டகடலை இன்று முதல் வினியோகம்.
திருச்சி மாவட்டத்தில்
ரேஷன் கடைகளில் தலா 5 கிலோ கொண்டைக்கடலை
குறிப்பிட்ட கார்டுகளுக்கு
இன்று முதல் வினியோகம்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தலா 5 கிலோ கொண்டைக்கடலை, குறிப்பிட்ட கார்டுகளுக்கு மட்டும் இன்றுமுதல் வினியோகிக்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மார்ச் மாதம் 25ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்தது.
தமிழக அரசின் பொது வினியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் கொரோனா காலக்கட்டத்தில் ஒரு மாதம் மட்டும் ரூ.1,000 வழங்கப்பட்டது. தொடர்ந்து 3 மாதங்கள் அரிசி, துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை ஆகியவை இலவசமாக தமிழக அரசால் வழங்கப்பட்டது.
அதேபோல கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி மத்திய அரசின் திட்டத்தின் கீழும் இலவசமாக வழங்கப்பட்டது. கடந்த மாதத்துடன் அத்திட்டம் நிறைவு பெற்றது.
அதையடுத்து கொரோனா காலத்தில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலோ கொண்டைக்கடலையை இலவசமாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
அதாவது மத்திய அரசின் திட்டத்தில் அந்தியோதயா அன்னயோஜனா (ஏ.ஏ.ஒய்) மற்றும் வறுமை கோட் டுக்கு கீழ் வசிப்போர் ரேஷன் கார்டு (பி.எச்.எச்.) கார்டுகளுக்கு மட்டும் தலா 1 கிலோ வீதம் 5 மாதங்களை கணக்கீட்டு மொத்தமாக இந்த மாதம் (டிசம்பர்) 5 கிலோ கொண்டைக்கடலை இலவசமாக வழங்கப்ப டுகிறது.
வறுமைகோட்டுக்கு மேல் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் என வரையறுக்கப்பட்ட எம்.பி.எச். கார்டுதாரர்களுக்கு கொண்டைக்கடலை வழங்கும் திட்டம் இல்லை. அக்கார்டுதார்களுக்கு துவரம்பருப்பு மட்டும் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் மேற்குறிப்பிட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு அனைத்து ரேஷன் கடைகளிலும் தலா 5 கிலோ கொண்டைக்கடலை இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 6ம் தேதிவரை இலவசமாக வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் மட்டும் 7 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அதாவது, திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, லால்குடி, மண்ண ச்சநல்லூர், ஸ்ரீரங்கம், முசிறி, தொட்டியம், துறையூர், மணப்பாறை, மருங்காபுரி ஆகிய 10 வட்ட வழங்கல் அலுவலகம் மூலம் ரேஷன் கார்டுகள் பதிவு பெற்றுள்ளன. அவற்றில் ஏ.ஏ.ஒய். மற்றும் பி.எச்.எச். ஆகிய கார்டுகளுக்கு மட்டும் இன்று முதல் மத்திய அரசு திட்டத்தின்கீழ் தலா 5 கிலோ கொண்டைக்கடலை இலவசமாக வழங்கப்படுகிறது. கொண்டைக்கடலை பாக்கெட்டுகள் நேற்றே அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வந்து இறங்கி விட்டன.
அதற்காக, ஒவ்வொரு ரேஷன்கடை விற்பனையாளர்களும் நேற்று வீடு வீடாகவும், ரேஷன் கடைகளிலும் கொண்டைக்கடலை வாங்க தகுதியுள்ள கார்டுதாரர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்தனர்.
துவரம்பருப்பு வாங்கக்கூடிய எம்.பி.எச். கார்டுதாரர்களுக்கு 7ம் தேதி முதல் வாங்கும் வகையில் டோக்கன்கள் வழங்கப்பட்டன.
இது குறித்து குடிமைப்பொருட்கள் வழங்கல் அதிகாரி ஒருவர் கூறுகையில் மத்திய அரசு கொரோனா காலக்கட்டத்தில் பொதுமக்கள் நலன்கருதி இலவசமாக கொண்டைக்கடலை வழங்க அறிவிப்பு செய்தது. அதன்படி, கடந்த ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை (5 மாதம்) மாதத்திற்கு தலா 1 கிலோ கொண்டைக்கடலை என கணக்கீட்டு 5 மாதத்திற்கும் மொத்தமாக ஒரு கார் டுக்கு 5 கிலோ கொண்டைக்கடலை இன்று முதல் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. இது ஒருமுறை மட்டுமே வினியோகிக்கப்படும் எனக் கூறினார்.