புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்க டி.ராஜேந்தர் முடிவு .
புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்க டி.ராஜேந்தர் முடிவு .
டி.ராஜேந்தர் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
தயாரிப்பாளர் சங்க தேர்தல் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது.
இதில் முரளி ராம நாராயணன் வெற்றி பெற்றார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளியை எதிர்த்து போட்டியிட்ட இயக்குநர் டி.ராஜேந்தர் தோல்வியைத் தழுவினார். தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 557 வாக்குகள், டிஆர் 337 மற்றும் பி.எல். சுயேட்சையாக போட்டியிட்ட தேனப்பன் 87 வாக்குகளும் பெற்றனர்.
இதை ஏற்க மறுத்த டி. ராஜேந்தர் தேர்தலில் கள்ள ஓட்டுகள் போடப்பட்டிருப்பதாக சங்க தனி அலுவலருக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தோல்வியடைந்த டி.ராஜேந்தர் தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பாரதிராஜா தலைமையில் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் இயங்கி வரும் நிலையில் டி.ஆரின் இந்த அதிரடி முடிவு சலசலப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.