தென்னிந்தியாவில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. வானதி சீனிவாசன் பேட்டி.
தென்னிந்தியாவில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. வானதி சீனிவாசன் பேட்டி.
தென்னிந்தியாவில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது என வானதி சீனிவாசன் பேட்டி.
தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் திமுகவுடனான கூட்டணியில் நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளது.
இதேபோல அதிமுக – பாஜக கூட்டணியும் உறுதிசெய்யப்பட்டுள்ளது, இந்நிலையில் இது குறித்து வானதி ஸ்ரீனிவாசன் கூறியதாவது,
தமிழகத்தில் கூட்டணி முடிவு ஆகிவிட்டது. ஆனால் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என தலைமைதான் முடிவு செய்யும். நான் போட்டியிடுவது பற்றியும் மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும்.
தென் இந்தியாவில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. தெலங்கானாவில் தற்போது டிஆர்எஸ், பாஜக என்ற நிலை வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.