Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 4 தொகுதிகளின் வெற்றிக்கனியை முதல்வரிடம் ஒப்படைக்க வேண்டும் மு.பரஞ்சோதி பேச்சு.

வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 4 தொகுதிகளின் வெற்றிக்கனியை முதல்வரிடம் ஒப்படைக்க வேண்டும் மு.பரஞ்சோதி பேச்சு.

0

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக ஒன்றிய, பகுதி, நகர கழக செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

திருச்சி தில்லைநகரில் உள்ள அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தது பேசிய அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி…

சென்னையில் நடைபெற்ற மண்டல பொறுப்பாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அதிமுக தலைமை அறிவித்துள்ள தேர்தல் வியூகங்களை மாவட்ட செயலாளர்கள் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும், புதிய உறுப்பினர்களை கொண்ட மகளிர் குழு அமைக்கப்பட வேண்டும் அதில் 25 முதல் 45 வயதுக்குட்பட்ட 25 பெண்களைக் கொண்ட குழுவிற்கு, ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படவுள்ளார்.

இதற்கான படிவங்கள் அந்தந்த ஒன்றிய, பகுதி கழக பொறுப்பாளர்களிடம் இன்று கொடுக்கப்படுகிறது. இதனை பூர்த்தி செய்து தலைமைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை 10 நாட்களுக்குள் மேற்கொள்ள வேண்டும், அதனைத் தொடர்ந்து, அவர்களுக்கான உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட உள்ளது.

மேலும், பூத் கமிட்டி அமைப்பதற்கு, ஒரு பூத் கமிட்டிக்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் தலைமையில் 18 பேர் கொண்ட உறுப்பினர்கள் உருவாக்கப்பட உள்ளனர்.

அவர்களுக்கான படிவங்களையும் பெற்று பூர்த்திசெய்து அனுப்பப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் கொடுக்கப்பட்ட படிவங்களின் அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

புயலின்போது, தமிழகத்தில் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு கூட்டம் பாராட்டு தெரிவித்து கொள்கிறது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் மகளிர் குழுக்களை அமைத்து தேர்தல் பணிகளை சிறப்பாக செய்வது,

2021 இல் நடைபெறும் சட்டமன்ற பொதுத் தேர்தலில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறக் கூடிய அளவிற்கு கழக பணியாற்றி, 4 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி கனியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பொற்கரங்களில் சமர்ப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் திருச்சி புறநகர் அதிமுக மாவட்ட கழக செயலாளர் பரஞ்சோதி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் பூத் கமிட்டி, மகளிர் குழுவுக்கான படிவத்தை வழங்கினர்.

மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சிவபதி, முன்னாள் அமைச்சர்கள் பூனாட்சி, அண்ணாவி, எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், பரமேஸ்வரி முருகன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் பொன்.செல்வராஜ், புல்லட் ஜான், பிரின்ஸ் தங்கவேல் உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, சார்பு அணி செயலாளர்கள் பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.