Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மொத்த வியாபாரத்திற்கு தடை விதித்தாலும், சில்லறை வியாபாரத்துக்கு அனுமதி வேண்டும். காந்தி மார்க்கெட் சில்லரை வியாபாரிகள் வலியுறுத்தல்.

மொத்த வியாபாரத்திற்கு தடை விதித்தாலும், சில்லறை வியாபாரத்துக்கு அனுமதி வேண்டும். காந்தி மார்க்கெட் சில்லரை வியாபாரிகள் வலியுறுத்தல்.

0

காந்தி மார்க்கெட்டை திறக்ககோரி உச்சநீதிமன்றத்தல் வழக்கு.

காந்தி மார்க்கெட்டை திறக்ககோரி உச்சநீதிமன்றத்தல் வழக்கு
மேல்முறையீடு செய்துள்ளதாக அறிஞர அண்ணா மொத்தம் மற்றும் சில்லறை வணிகர்கள் நல சங்க கூட்டத்தில் தெரிவித்தனர்.

கொரோனாவை காரணம் காட்டி காந்தி மார்க்கெட் மூடப்பட்டு 8 மாதங்கள் ஆன நிலையில் மூடப்பட்ட காந்தி மார்க்கெட்டை மீண்டும் திறக்க வலியுறுத்தி வியாபாரிகள் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திவந்த நிலையில் இன்று (26 ந் தேதி) உயர்நீதிமன்றத்தில் காந்தி மார்க்கெட்டை திறக்ககோரிய வழக்கில் விசாரணை வர உள்ள நிலையில், திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் வியாபாரம் செய்துவரும் காந்தி மார்க்கெட் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் நேற்று முன்தினம் இரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே அறிஞர் அண்ணா மொத்தம் மற்றும் சில்லறை வணிகர்கள் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் எஸ்.பி.பாபு தலைமையில் திருச்சியில் காந்திமார்க்கெட் திறப்பு குறித்து அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது,
காந்தி மார்க்கெட் வியாபாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்திற்க்கு பின் நிருபர்களிடம் எஸ்,பி,பாபு கூறுகையில்,

அனைத்து மூடப்பட்ட சந்தைகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில் காந்திமார்க்கெட் மட்டும் திறக்காதது வேதனை அளிப்பதுடன், நீதிமன்றத்தில் காந்தி மார்க்கெட்டை திறக்கக்கூடாது என தனிநபர் வழக்கு தொடர்ந்ததையடுத்து, வழக்கு நிலுவையில் இருப்பதால் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பனியிலும், மழையிலும், பாதிக்கப்படுவதுடன், விளைபொருட்கள் சேதம் அடைவது குறித்து நீதிமன்றத்தில் எடுத்துரைத்தும், கண்டுகொள்வதாக இல்லை, இதனால் சுப்ரீம் கோர்ட்டை அணுகி வழக்கு நடத்தவும், காந்தி மார்க்கெட்டை திறந்து வியாபாரம் நடத்த அனுமதி கோரி வழக்காட ஆர்டர் எண் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

எங்களுடைய சிரமங்களை உயர் நீதிமன்றம் காதில் கொள்ளவில்லை, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்எங்களது காந்தி மார்க்கெட்டை திறக்கவேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாக உள்ளது என்றும்,

காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் நடத்த தடைவிதிக்கப்பட்டாலும் சில்லறை வியாபாரத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், வியாபாரிகள் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதுடன், மழையின் காரணமாகவே இரண்டு நாட்கள் வியாபாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பேட்டியின்போது நிர்வாகிகள் கந்தசாமி, மாரிமுத்து, காளிமுத்து, தனபால்,ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.