சென்னையில் மழையின் காரணமாக பாலம் இடிந்து விழுந்ததில் 20 அடிப்பள்ளம்.
சென்னையில் மழையின் காரணமாக பாலம் இடிந்து விழுந்ததில் 20 அடிப்பள்ளம்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே போடப்பட்டிருந்த இரும்புப் பாதை கனமழை காரணமாக விழுந்ததில் 20 அடிக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.

சென்னை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ரயில் நிலையம் எதிரே சாலையை கடப்பதற்காக இரும்புப் பாதை போடப்பட்டிருந்தது. நகரின் முக்கிய சாலையில் இருந்த இந்தப் பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் நிவர் புயலின் காரணமாக பெய்து வந்த கனமழையால் அந்த பாலம் இடிந்து விழுந்து 20 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது.
இந்த விபத்தில் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.