கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியாக உயர்ந்தது.
இதனால் ஏரியின் பாதுக்காப்பை கருதி இன்று மதியம் 6 மணிக்கு வினாடிக்கு 5000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமானதால் தற்போது 7000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனால் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் முடிச்சூர் பகுதியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.