நிவர் புயலை வைத்து செய்யும் நம் மீம்ஸ் கிரியேட்டர்கள்.
நிவர் புயலை வைத்து செய்யும் நம் மீம்ஸ் கிரியேட்டர்கள்.
*நிவர் புயலை வைத்து செய்யும் மீம் க்ரியேட்டர்கள்*
என்னதான் நிலைமை மோசமான போனாலும் மீம் கிரேயட்டர்கள் இல்லாமல் வாழ்க்கை ஓடாது என்பது தான் நிதர்சனமான உண்மை. அட வெளில மழை வெளுத்து வாங்குது, ஆனாலும் இவங்கள ஒன்னும் செஞ்சுக்க முடியலன்னு தான் தோணுது.
நிவர் புயல் வருவதற்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் துவங்கி கொரோனா வரை அனைத்தையும் “வச்சு செஞ்ச” அவங்களுக்கு தற்போது வசமாக மாட்டிக் கொண்ட ஒரு பலி கெடா தான் இந்த நிவர் .
திகிலைக் கிளப்பும் தலைப்பு செய்திகளும், முக்கிய செய்திகளும் படித்து பெரும் மூச்சுவிடும் நபர்களுக்கு இளைப்பாற இந்த மீம்கள் உதவும் என நினைக்கின்றோம்.
எல்லாருக்கும் இதுல என்ன கவலைன்னா, கொரோனாவையே தூக்கி சாப்ட்றுச்சு இந்த நிவர் புயல் என்பதில் தான்…
வருசம் வருசம் வரும் புயல் தான்… ஆனா இந்த புயலுக்கான சேதாரத்தையும் என் தலைல கட்டிடாதீங்கன்னு செல்லமா சண்டை போடுதாம் 2020 வருசம். ஆனாலும் இந்த வருசம் எல்லாருக்கும் நெறைய செஞ்சுருக்கு போல…
அட யாரெல்லாம் இந்த 2021 வருசத்துக்கு ஆவலா காத்துக்கிட்டு இருக்கிங்கன்னு ஒரு வார்த்தை சொன்னா, அடுத்த வருசத்துக்கான பக்கெட் லிஸ்ட்டை காலம் ரெடி பண்ண ஆரம்பிச்சுரும்னு பட்சி சொல்லுதாம்
இந்த கொரோனா காலத்தில் அம்மாக்கள் தான் பாஸ் ரொம்ப பாவம்… கொஞ்சம் மனசு வைங்க… உங்களுக்கு வேணும்னா நீங்க சமைச்சு அம்மாவுக்கு தரலாம்.
மழை காலத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்கவும். அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பை நல்கி இந்த நிவர் புயலையும் எதிர் கொள்வோம்.