Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அடை மழை பற்றிய சுவாரசியமான தகவல் …..

அடை மழை பற்றிய சுவாரசியமான தகவல் .....

0

கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் பழம் பெரும் நடிகர் K.K.சௌந்தர் ஊர் நாட்டாண்மையாக நடித்து இருப்பார்..கதாநாயகன் சுதாகர் வேலை தேடி சென்னை சென்றிருப்பார் கதாநாயகி ராதிகா காதலன் சுதாகரிடமிருந்து வரும் செய்திக்காக காத்து இருப்பார்.ரயிலின் கடைசிப் பெட்டியில் காதலன் சுதாகர் எழுதி அனுப்பும் காதல் குறுஞ்செய்தியே ராதிகாவை வாழ வைக்கும் உயிர் செய்தி.

நாட்டாண்மை K.K.சௌந்தர் வானத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்களை பார்ப்பார்..”காற்று திசை மாறி அடிக்கிறதே பறவைகள் எல்லாம் திசை மாறி பறக்கிறதே ஊரையே வெள்ளத்தால் மூழ்கடிக்கப் போகும் அடைமழை கொட்டப் போகிறது”என்று வானிலையை கணித்துச் சொல்வார்.

நாட்டாண்மை சொன்னது மாதிரியே மழை கொட்டத் துவங்கும் ஊரே வெள்ளக் காடாக மாறும் அடைமழை விடாது அடிக்கத் துவங்கும் நடிகர்பாக்கியராஜ் கிழக்கே போகும் ரயில் படத்தில் நாட்டாண்மைக்கு உதவியாளராக நடித்திருப்பார்..ஊரின் வெள்ள நிலவரங்களை அவ்வப்போது நாட்டாண்மையிடம் Update பண்ணிக் கொண்டே இருப்பார்.

ஊரில் பெய்து வரும் மழையை நிறுத்த கன்னிப் பெண் ஒருவர் கையில் நெருப்பு பந்தத்தோடு..உடம்பில் துணி ஏதும் இல்லாமல் ஊரைச் சுற்றி வந்தால் மழை நின்று விடும் என்று பேசி முடிக்கப்பட்டு..ஊரில் உள்ள அனைத்து கன்னிப் பெண்களின்பெயரையும் எழுதிப் போட்டு குடவோலை முறையில் தேர்ந்தெடுத்தால் கதாநாயகி ராதிகா பெயர் வந்துவிடும்.

ராதிகாவிற்கு அனைத்து சடங்குகளும் செய்யப்பட்டு..கையில் நெருப்பு பந்தம் கொடுத்து..உடம்பில் துணி ஏதும் இல்லாமல் ராதிகா ஊரைச் சுற்றி வரும் போது..கதாநாயகன் சுதாகர் சென்னையில் இருந்து அதிகாலை அப்போதுதான் ஊருக்கு வருவார்..ராதிகாவை அந்த கோலத்தில் பார்த்து அதிர்ச்சிக்கு உள்ளாகி..தான் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து ராதிகாவை காப்பாற்ற.ஊரே ராதிகாவையும் சுதாகரையும் துரத்த..கிழக்கே போகும் ரயிலில் இருவரும் ஏறி தப்பிக்க..இயக்குநர் பாரதி ராஜா ரயில் Gurd ஆக விசில் ஊத..ரயில் காதலர்களை காப்பாற்றும்.

42 ஆண்டுகளுக்கு முன்பு இந்த படத்தை பார்க்கும்போது அடைமழை என்பதெல்லாம் நாங்கள் அனுபவித்த ஒன்றுதான்.

அடைத்த கதவை திறக்க கூட இயலாத அளவிற்கு இடைவிடாமல்பெய்யும் மழையே அடை மழை என்பதாகும். விடாமல் 15 நாட்கள் மழை பெய்யும் கோணிப் பையை தலையில் போட்டுக் கொண்டு லாந்தர் விளக்கை கையில் பிடித்துக் கொண்டு இரவில் ஆண்கள் வெளியே செல்வார்கள்.

குடிசை வீடுகள் அதிகம் என்பதால்..வீட்டில் அடுப்பு எரிந்தால்.புகை வெளியே வரும்..போப்ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் லத்திகனில் உள்ள புகைப் போக்கி கூண்டில் வெள்ளைப் புகை வருமோ அதைப்போல் குடிசை வீட்ல அடுப்பு எரிந்தால் புகை வெளியே வரும்..அதைப் பார்த்தவுடன் அக்கம் பக்கத்து வீட்ல இருப்பவர்கள் அடுப்பு எரியும் வீட்ல நெருப்பு கேட்டு வருவார்கள்.

அப்போதெல்லாம் மழை குறித்தோ புயல் குறித்தோ மக்களிடம் இந்த அளவிற்கு அச்சம் இருக்காது செய்தி சேனல்கள், தொலைக்காட்சிகள் அதிகம் இல்லாததால் மக்கள் பீதி அடைய மாட்டார்கள்.அரசு நிவாரணங்கள் அதிகாரிகளின் உதவிகள் எதையும் மக்கள் எதிர் பார்க்க மாட்டார்கள்.

ஒர் நேரத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் பகுதியில் வெள்ளம் வந்தது. MGR வந்து பார்த்தார். வெள்ளச் சேதத்தை சென்று பார்த்த பொதுமக்களை விட MGR ஐ பார்க்கச் சென்ற கூட்டம் தான் அதிகம் ரோஜாப்பூ கலர் பா..சந்தனக்கலர் ஜிப்பாவுல வாத்தியாரை பார்த்தியா..MGR ஏன் ரெண்டு கண்ணாடி வசௌசிருக்கார் தெரியுமா??MGR. கட்டியிருக்கின்ற கடிகாரத்தை பார்த்தியா??MGR தினமும் தங்க பஷ்பம் சாப்பிடுவாராம்பா, இப்படியே பேசி கூட்டம் கலைந்திடும்.

இப்போதெல்லாம் புயல் ஒன்று உருவாகி விட்டால் அதற்கு பெயர் சூட்டும் விழா அதன் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கும் சேட்லைட்டுகள்..தனியார் வானிலை மையங்கள்.அரசு வானிலை நிறுவனங்கள்..என ஏகப்பட்ட பில்டப்புகள்.

அப்போதெல்லாம் இது மாதிரி இல்லை எங்கோ யார் வீட்டிலோ இருக்கின்ற டிரான்சிஸ்டர் ரேடியோக்கள் அதில் சொல்லப்பப்ட்ட. செய்திகள் மட்டுமே.

இயற்கையை நேசித்ததால் என்னவோ அப்போதெல்லாம் இயற்கையை பார்த்து மனிதன்பயப்படவில்லை..இப்போது நாம் இயற்கைக்கு விரோதமான காரியங்களை செய்வதினால் இயற்கையை பார்த்து பயப்படுகிறோம்..என எண்ணத் தோன்றுகிறது.

கடலோர மரங்களை அழிக்கின்றோம்..இயற்கையான மலைகளை குடைகின்றோம்..ஆற்று மணலை கொள்ளையடிக்கின்றோம்..இயற்கையான சாலைகளில் தாரைக்கொட்டி டோல்கேட் அமைத்து பணம் சம்பாதிக்கின்றோம்..ஆண்டாண்டு காலமாய் வாழ்ந்த மரங்களை ஒரு நொடியில் வெட்டி சாய்க்கின்றோம்..

இத்தனை இடர் பாடுகளை இயற்கைக்கு செய்வதினால் இயற்கையான..மழை, புயல்…வெயிலுக்கு அஞ்சி நடுங்குகின்றோம் எனத் தோன்றுகிறது.

Leave A Reply

Your email address will not be published.