இன்றைய ராசிப்பலன் – 25.11.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் மந்தநிலை இருக்கும். குழந்தைகளால் வீட்டில் வீண் செலவு ஏற்படும்.பணவரவு சுமாராக இருக்கும் வீட்டு தேவைகளும் பூர்த்தியாகும். உற்றார் உடன்பிறந்தவர்கள் உதவி கிடைக்கும். தொழிலில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் நிகழ்ச்சி உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லக்கூடும். பூர்வீக சொத்துக்களில் நல்ல பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். தொழிலில் சிலருக்கு பதவி உயர்வு உண்டாகும். வருமானம் திருப்தியைக் கொடுக்கும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு திறமைகள் வெளிப்படுத்தும் நாளாக இன்று இருக்கும். நண்பர்கள் சந்திப்பால் சந்தோஷம் பெருகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். தொழிலில் உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டாகும்.உத்தியோகத்தில் எதிர்பார்த்த லாபத்தை விட அதிகம் இருக்கும்.
கடகம்
உங்கள் ராசிக்கு வீட்டில் எதிர்பாராத செலவுகள் இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாக கடன் வாங்க கூடும். சுபகாரியங்களில் தடைக்குப் பின் அனுகூலம் இருக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆலோசனை முன்னேற்றத்தை கொடுக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு தேவையில்லாத மனக் கவலை இருக்கும்.சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் வீண் அலைச்சல் உண்டாகும். உங்கள் பொருட்களை மற்றவர்களுக்கு இரவல் கொடுக்க வேண்டும்.புதிய முயற்சிகளை தள்ளி வைத்து விடுங்கள் அதுவே நல்லது.
கன்னி
உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவுகள் இருக்கும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பெரியவர்களின் மதிப்பை பெறுவீர்கள்.எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.
துலாம்
உங்களின் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உற்றார் உறவினர் வருகையால் சில செய்திகள் நடக்கலாம். உத்தியோக ரீதியில் அரசு வழி உதவி உண்டாகும். கொடுக்கல் வாங்கல் லாபத்தை கொடுக்கும். பொன்னும் பொருளும் சேரும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் இருக்கும். உடல்நிலையில் பாதிப்புகள் இருக்கும். நண்பர்களிடம் வாக்குவாதம் இருக்கும். எதையும் சிந்தித்து செயல்பட்டால் வியாபார ரீதியில் பிரச்சனைகள் தீரும்.உடனிருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டும் அதுவே நல்லது.
தனுசு
உங்களின் ராசிக்கு வீட்டில் அமைதி குறையும். உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கும். தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். எந்த செயல் செய்தாலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். வெளி பயணங்களால் உடல் சோர்வு இருக்கும். அனுகூல பலன் கிடைக்கும். பணப்பிரச்சனை தீரும்.
மகரம்
உங்களின் ராசிக்கு ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். குழந்தைகளின் அன்பு கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத இடமாற்றம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான உழைப்பு நல்ல பலனைக் கொடுக்கும். வருமானம் பெருகும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு தொழிலில் லாபம் சற்று குறைந்து இருக்கும் சூழ்நிலை இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறாமல் தடைகளை உண்டாக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நிதானம் வேண்டும். உடல்நிலையில் ஓரளவு பிரச்சனை நீங்கும். நண்பர்களால் அனுகூல பலன் உண்டாகும்.
மீனம்
உங்களின் ராசிக்கு எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். வீட்டில் மங்கல நிகழ்வு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகள் ஒற்றுமையாக இருப்பார்கள். தொழிலில் திறமைக்கேற்ற புதிய வாய்ப்பு கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்க ஆர்வம் கூடும்.