Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பிஜி நாயுடு பங்குதாரர் மகன் தற்கொலை. பரபரப்பான தகவல்கள்

திருச்சி பிஜி நாயுடு பங்குதாரர் மகன் தற்கொலை. பரபரப்பான தகவல்கள்

0

திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 25க்கும் அதிகமான கிளைகளைக் கொண்டு இயங்கி வரும் பிரபல ஸ்வீட் ஸ்டால் பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ்.

இதன் பங்குதாரர் பத்ரிநாத் மகன் முக்திநாத் (வயது 26) திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலை கைப்பற்றிய தில்லைநகர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் டிசம்பர் மாதம் 11ஆம் தேதி நடக்கவிருந்த தன்னுடைய திருமணத்தில் அவருக்கு விருப்பம் இல்லாததாக கூறப்படுகிறது.

மேலும் அவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும், வேறு எதும் குறைபாடு உள்ளதா என்பது குறித்து விசாரணைக்கு பிறகு தெரியும் என்றும் அல்லது வேறு ஏதாவது காரணங்களாக என்று தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.