போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த மண்டல ஐஜி ஜெயராமன்
போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த மண்டல ஐஜி ஜெயராமன்
நேற்று இரவு 9.48 மணி அளவில் குருப்பெயர்ச்சி நடைபெற்றது .
இதனை முன்னிட்டு தமிழகத்திலுள்ள உள்ள குரு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடை பெற்று வருகிறது.
தஞ்சை அருகே உள்ள திட்டை கிராமத்தில் உள்ள குருபகவான் கோயிலில் குருப்பெயர்ச்சி பூஜைகள் சிறப்பாக நடைபெறும் அந்த சமயம் பொது மக்கள் போக்குவரத்து சிரமமின்றி சமூக இடைவெளி உடன் பாதுகாப்பாக சாமி தரிசனம் செய்ய மண்டல ஐஜி ஜெயராமன் இன்று மதியம் ஒரு மணி அளவில் திட்டை குரு கோயில் சென்று அங்கு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து சாமி தரிசனம் செய்து திரும்பினார்.