திருச்சி மாநகர் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.
திருச்சி மாநகர் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.
திருச்சியில் ஊர்க்காவல்படைக்கு ஆட்கள் தேர்வு.
திருச்சி மாநகர காவல் ஆணையரை தளவாயாக கொண்டு செயல்படும் ஊர்க்காவல் படையில் உள்ள 23 காலியிடங்களை நிரப்ப தன்னார்வ தொண்டு உள்ளம் படைத்த ஆண்/பெண் இருபாலர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கீழ்க்கண்ட தகுதியுடையவர்கள் 11.11.2020-ம் தேதி காலை 06.30 மணிக்கு திருச்சி கே.கே.நகர் காவல் நிலையம் அருகில் உள்ள மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்திற்கு கல்விச்சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மூன்றுடன் நேரில் வர தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
தகுதிகள்:
பத்தாம் வகுப்பு.(S.S.L.C) தேர்ச்சி (அ) தோல்வி.
வயது வரம்பு 20 முதல் 45 வரை.
உயரம்-ஆண்-165 செ.மீ – பெண்-160 செ.மீ
திருச்சி மாநகரத்தில் வசிப்பவராக இருக்கவேண்டும்.
குற்ற வழக்குகளில் சம்மந்தப்படாதவராக இருக்கவேண்டும்.
எந்த ஒரு அரசியல் அமைப்பிலும் சம்மந்தப்படாதவராக இருக்கவேண்டும்.
மேற்படி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பயிற்சிக்கு அழைக்கப்படும்போது 35 நாட்கள் திருச்சி மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் பயிற்சி வழங்கப்படும் என்றும், பயிற்சி முடித்தவர்களுக்கு அழைப்பீட்டு தொகை அரசு நிர்ணயம் செய்தபடி பெற்று வழங்கப்படும் என்றும் இதன் முலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
என்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையரகம் அளித்துள்ள பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.