வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை, பாஜகவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?
வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை, பாஜகவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?
வேல் யாத்திரை”-க்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், தமிழக பாஜக-வின் அடுத்த கட்ட நிலை என்ன ? பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். நவம்பர் 6 – தேதி(நாளை ) திருத்தணியில் தொடங்கும் வேலை யாத்திரை திருச்செந்தூரில் டிசம்பர் 6 -ம் தேதி நிறைவு பெறுகிறது.
தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் திட்டமிட்டிருந்த இந்த யாத்திரையை தடை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் மற்றும் தமிழக வாழ்வுரிமைக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன.
இந்த நிலையில், இந்த யாத்திரைக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசுத் தரப்பில், கொரோனா இரண்டாம், மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், எனவே, வேல் யாத்திரைக்கு அனுமதியளிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இதையே தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் தனது பேட்டியில் தெளிவுபடுத்தியிருந்தார்.
இந்த நிலையில், தடையை மீறி யாத்திரை நடைபெறுமா அல்லது அரசின் அறிவுரையை ஏற்று நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து தமிழக பாஜக இதுவரை தெளிவுபடுத்தவில்லை. இதனால், “வேல் யாத்திரை” -யின் அடுத்த கட்டம் என்ன என பாஜக நிர்வாகிகளும், எதிர்க்கட்சிகளும் ஆவலோடு காத்துள்ளன.
இதனால் “வேல் யாத்திரை” பரபரப்பு அப்படியே தொடர்கிறது….