தீபாவளிக்குள் காந்தி மார்க்கெட்டை திறக்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம், வெள்ளையன் திருச்சியில் பேட்டி.
தீபாவளிக்குள் காந்தி மார்க்கெட்டை திறக்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம், வெள்ளையன் திருச்சியில் பேட்டி.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில தலைவர்
வெள்ளையன் நிருபர்களிடம் கூறியதாவது..
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கண்டித்து சிறை செல்லவும் வணிகர்கள் தயாராக இருக்கிறார்கள். தேவைப்படும்போது சிறை நிரப்பும் போராட்டத்தில் வணிகர்கள் ஈடுபடுவார்கள். தமிழகத்திலுள்ள பல்வேறு மார்க்கெட்களை முடக்கி வைத்திருக்கிறார்கள். இயல்பாக செயல்பட்டுவந்த சந்தைகளை அழிக்கப் பார்க்கிறார்கள்.
இதில் பெரும் பண முதலைகளின் தலையீடு இருக்கிறது. திருச்சி காந்தி மார்க்கெட் திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து பேசினேன், நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கிறார். ஏற்கனவே இதுதொடர்பாக முதல்வரையும் சந்தித்துப் பேசி இருக்கின்றேன். தீபாவளிக்கு முன்னதாக காந்தி மார்க்கெட்டை திறக்க வேண்டும். இல்லையென்றால் வணிகர்கள் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுச்செயலாளர் செல்வம், மாவட்ட தலைவர் ரவிமுத்துராஜா, செயலாளர் எஸ்.பி.பாபு, பொருளாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.