திருச்சியில் மாடு குறுக்கே வந்ததால் லாரி மோதி வாலிபர் பலி.
திருச்சியில் மாடு குறுக்கே வந்ததால் லாரி மோதி வாலிபர் பலி.
திருச்சி வையம்பட்டி தொப்பம்பட்டியை சேர்ந்தவர் அஜித் குமார்(வயது 28). இவர் ஏர்போர்ட் பகுதியில் தனியார் விடுதியில் தங்கி இருந்து குண்டூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வழக்கம்போல இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு கிளப்பி சென்றபோது, திருச்சி புதுக்கோட்டை மெயின் ரோடு ஏர்போர்ட் பகுதி அருகே மாடு ஒன்று குறுக்கே வந்துள்ளது.
நிலைதடுமாறினார் அஜித்குமார், இதன் காரணமாக பின்னால் வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதி தலையில் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.