எங்கள் ஓட்டு ரஜினி ஒருவருக்கு, படபடப்பு வாசகம் அடங்கிய போஸ்டர்களால் பரபரப்பு
எங்கள் ஓட்டு ரஜினி ஒருவருக்கு, படபடப்பு வாசகம் அடங்கிய போஸ்டர்களால் பரபரப்பு
கழுகு, ஓநாய்களை வேட்டையாட அரசியலுக்கு வாங்க ரஜினி!’ – வேலூரைப் பரபரப்பாக்கிய போஸ்டர்
ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குத்தான் என்ற ஹேஷ்டேக்கும்’’ ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டானது. இதே வாசகத்துடன் ‘‘நீங்கள் வாங்க ரஜினி, எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான்’’ என்று எழுதப்பட்ட போஸ்டர்களும் அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியிருக்கின்றன. இந்த நிலையில், வேலூர் மாவட்டத்திலும், ‘‘பூ பாதையா? சிங்கப் பாதையா?’’ என்று ரஜினி ஸ்டைலில், நாணயத்தை சுழற்றிவிட்டுள்ளனர் அவரது ரசிகர்கள்.
‘‘மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் கழுகு கூட்டத்தையும், ஓநாய் கூட்டத்தையும் வேட்டையாட சிங்கப் பாதையில்தான் செல்ல வேண்டும். எங்கள் ஓட்டு ரஜினி ஒருவருக்கே!’’ என்ற அதிரடியான வாசகம் அடங்கிய போஸ்டர்கள் வேலூரில் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டிருக்கின்றன. ‘‘இப்படிக்கு மாற்றத்தை எதிர்ப்பார்க்கும் வேலூர் பொதுமக்கள்’’ எனவும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளன.
போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்த நபர்களிடம் சென்று கேட்டபோது, ‘‘வரும் சட்டமன்ற தேர்தலில் ஓட்டுனு போட்டால் எங்கள் தலைவருக்கு மட்டுமே போடுவோம். இல்லைனா, வாக்குச்சாவடி பக்கமே போக மாட்டோம். தலைவர் அரசியலுக்கு வரணும். தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்படணும்’’ என்றனர் அதிரடியாக.