திருச்சியில் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி. அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி துவக்கி வைத்தனர்.
திருச்சியில் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி. அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி துவக்கி வைத்தனர்.
திருச்சி மாநகராட்சியில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ், CYCLES 4 CHANGE CHALLENGE இன்று காலை 7.00 மணிக்கு மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி தலைமை தபால் நிலையத்திலிருந்து கன்டோன்மென்ட் வழியாக துவங்கியது.
அமைச்சர்கள் என். வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் இப்பேரணியை தொடங்கி வைத்தார்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, மாநகர காவல் ஆணையர் . லோகநாதன், மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், மாநகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.
இப்பேரணி தென்னூர் அண்ணா நகர் , உழவர்சந்தை வரை சென்று நிறைவு பெற்றது.