மகர விளக்கு பூஜைக்காக 15-ஆம் தேதி முதல் சபரிமலை கோயில் திறப்பு
மகர விளக்கு பூஜைக்காக 15-ஆம் தேதி முதல் சபரிமலை கோயில் திறப்பு
*மகர விளக்கு பூஜைக்காக வரும் 15-ஆம் தேதி சபரிமலை கோயில் திறப்பு..*
பக்தர்களை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக, நவம்பர் 15-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
நவம்பர் 16-ஆம் தேதி முதல் டிசம்பர் 26-ஆம் தேதி வரை மண்டல பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், டிசம்பர் 30ம் தேதி முதல் ஜனவரி 20 வரை மகர விளக்கு பூஜைக்கு, நடை திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 26-ஆம் தேதி தங்க அங்கியுடன் மண்டல பூஜை நடைபெறும் என்றும், ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் 5 நாட்கள் 1000 பக்தர்களுக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2,000 பேருக்கும், மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை தினத்தன்று 5000 பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்று அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.