விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணி விஜயகாந்த் மகன் பரபரப்பு பேட்டி
விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணி விஜயகாந்த் மகன் பரபரப்பு பேட்டி
தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி! விஜய பிரபாகரன் பரபரப்பு பேட்டி !
தமிழகத்தில் தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக, அதிமுக என இரண்டு பெரிய கட்சிகள் கோலோச்சி வரும் நிலையில், நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக மூன்றாவது சக்தியாக வலம் வருவதாக கூறப்படுகிறது.
கட்ந்த பேரவை தேர்தலில் தனித்து போட்டி என்ற முடிவில் இருந்து மாறி, அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தற்போதும் அதே கூட்டணியில் நீடித்து வருகிறார். வரும் தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் தேமுதிக தொடருமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், வரும் 2021 -ம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் தேமுதிக வெற்றி பெற வேண்டும் பொது மக்களும், கட்சியினரும் விரும்புகின்றனர். மக்களின் நலன் கருதி தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி அமைக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
இதனால், தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் தலைமையில் தான் கூட்டணி என்பது மாறி, தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி உருவாகியுள்ளது. இதனால், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.