பேச்சு சுதந்திரம் உண்டு என்பதை ஞாபக படுத்த வேண்டுமா?திருமாவுக்கு ப.சி ஆதரவு
பேச்சு சுதந்திரம் உண்டு என்பதை ஞாபக படுத்த வேண்டுமா?திருமாவுக்கு ப.சி ஆதரவு
பேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை நாள் தோறும் நினைவுபடுத்த வேண்டுமா? – திருமாவளவனுக்கு ப.சிதம்பரம் ஆதரவு
ஐரோப்பிய பெரியார் – அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் நடைபெற்ற இணையக் கருத்தரங்கில் கடந்த சில தினங்களுக்கு முன் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனுஸ்மிருதியில் பெண்கள் குறித்து இழிவாக குறிப்பிட்டிருப்பதாக அதனை விவரித்தார். அதனையடுத்து, அவர் பேசியதில் ஒரு பகுதி மட்டும் எடிட் செய்யப்பட்டு இணையத்தில் வைரலானது. பெண்கள் குறித்து திருமாவளவன் இழிவாக பேசிவிட்டார். அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று குஷ்பு காட்டமாக விமர்சனம் செய்தனர். மேலும், திருமாவளவன் மீது காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவித்து திருமாவளவனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டர் பதிவில், ‘தந்தை பெரியார் பற்றிய கருத்தரங்கில் நண்பர் திரு திருமாவளவன் ஆற்றிய உரை (குற்றவியல்) குற்றம் என்று காவல் துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.
தந்தை பெரியார் பற்றிய கருத்தரங்கில் நண்பர் திரு திருமாவளவன் ஆற்றிய உரை (குற்றவியல்) குற்றம் என்று காவல் துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது
பேசிய பொருள் ஏற்படையதா இல்லையா என்பது பற்றி இரண்டு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அது எப்படி (குற்றவியல்) குற்றம் ஆகும்? பேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை நாள் தோறும் நினைவு படுத்த வேண்டுமா?
இது போன்ற கருத்துக்களைத் தந்தை பெரியார் பேசினார். இன்று அவர் பேசியிருந்தால் காவல் துறை என்ன செய்திருப்பார்கள்?’ என்று குறிப்பிட்டுள்ளார்.