இந்த ருசியும் மணமும் கிடைக்குமா? மாங்காய் பருப்பு குழம்பு செய்முறை
மாங்காய் பருப்பு குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்: மாங்காய் – 1, துவரம் பருப்பு – 1/4 கப், சாம்பார் பொடி – 2 டீ ஸ்பூன், வெந்தயம் – 1/2 டீ ஸ்பூன், பெருங்காயம் – சிறிதளவு, பச்சை மிளகாய் – 2, காய்ந்த மிளகாய் – 1, கருவேப்பிலை – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு
மாங்காய் பருப்பு குழம்பு செய்முறை:
மாங்காய் பருப்பு குழம்பு செய்யும் முறை வருமாறு: முதலில் துவரம் பருப்பை நன்றாக வேகவைத்துக் கொள்ளுங்கள். மாங்காயை தண்ணீர் விட்டு தனியாக வேக வைக்கவும். பின்னர் வெந்த மாங்காயுடன் வேகவைத்த துவரம் பருப்பை சேர்க்க வேண்டும். உப்பு, சாம்பார் பொடி சேர்த்துக் கொதிக்க வையுங்கள்.
தாளிக்க ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாயை சேர்த்து வறுக்க வேண்டும். இதை கொதிக்கும் குழம்பில் சேர்த்து, கறிவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான மாங்காய் பருப்பு குழம்பு தயார்.
மிக எளிமையான செய்முறை கொண்ட மாங்காய் பருப்புக் குழம்பு டேஸ்டியானதும்கூட. இதை செய்து ருசித்துப் பாருங்கள்.