26ந் தேதி சம்பவம் செய்ய போகும் சிம்பு. ரசிகர்கள் மகிழ்ச்சி

சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் கிராமத்து கதையில் நடித்து வருகிறார். அந்த படத்தில் நிதி அகர்வால் சிம்பு ஜோடியாக நடிக்கிறார். படப்பிடிப்பை ஒரே மாதத்தில் நடத்தி முடிக்க திட்டமிட்டு வேலை செய்து வருகிறார் சுசீந்திரன்.
இந்த படத்திற்காக சிம்பு தன் உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லியாகிவிட்டார். சுசீந்திரனின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள விமான நிலையத்திற்கு சிம்பு வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது. மாஸ்க் அணிந்திருந்ததால் சிம்புவின் முகம் தெரியவில்லை.
இந்நிலையில் சிம்பு நேற்று சமூக வலைதளங்களில் மீண்டும் என்ட்ரி கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவை பார்த்தவர்கள், இப்படித் தான் சிம்பு எடையை குறைத்திருக்கிறார், வாவ் என்று கூறி வியந்தார்கள்.
சோஷியல் மீடியாவில் என்ட்ரி கொடுத்த சிம்பு: ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்
சிம்பு சமூக வலைதளத்திற்கு வந்திருப்பதால் இனி அடிக்கடி அப்டேட் கிடைக்கும் என்று ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை அக்டோபர் 26ம் தேதி மதியம் 12.12 மணிக்கு வெளியாகும் என்று சிம்பு ட்வீட் செய்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவரின் கால்கள் தான் தெரிகிறது. கால்களை பார்த்தே சிம்பு ரசிகர்களால் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. இருக்கு, விஜயதசமி அன்று தரமான சம்பவம் இருக்கு. அண்ணன் வேட்டை ஆரம்பம். சம்பவம் செய்யப் போகிறார் என்று ரசிகர்கள் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
லாக்டவுனுக்கு முன்பு சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் அப்துல் காலிக் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் மாநாடு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்பை அடுத்த மாதம் துவங்கவிருக்கிறார்கள்.
மாநாடு படப்பிடிப்பு மீண்டும் துவங்குவதற்குள் சிம்பு, சுசீந்திரன் பட வேலையை முடித்துவிடுவாராம். மாநாடு படத்தை அடுத்து சிம்பு, கமல் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
*26ம் தேதி 12.12 மணிக்கு சம்பவம் செய்யப் போறார் சிம்பு: துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்*