Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நவராத்திரி விழா சிறப்புகள்

நவராத்திரி விழா சிறப்புகள்

0

நவராத்திரி விழா

நவராத்திரியின் ஒன்பது நாட்கள்
ஒன்பது இரவுகள் நடைபெறும். இப்பண்டிகையினை நவராத்திரி என்று அழைக்கிறோம்.

நவராத்திரி விழாவில் ஒன்பது வடிவங்களில் பார்வதி தேவி வழிபடப்படுகிறாள்.

1. ஆதி லட்சுமி,
2. தன லட்சுமி,
3. தான்ய லட்சுமி,
4. சந்தான லட்சுமி
5. ஐசுவரிய லட்சுமி,
6. கஜ லட்சுமி,
7. வீர லட்சுமி,
8. விஜய லட்சுமி ஆகிய அஷ்ட லட்சுமிகளுக்கு நவராத்திரியின் முதல் எட்டு நாட்கள் அர்ப்பணிக்கப்படுகின்றன.
மஹாநவமி என்று சொல்லப்படும் ஒன்பதாம் நாள் ஹயக்ரீவரின் மடியில் அமர்ந்திருக்கும்
லட்சுமிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
ஓரறிவு கொண்ட புழுவாகவும் செடி கொடியாகவும் பிறந்து, அதன்பின் ஊர்வன, பறப்பன எனப் பல்வேறு பிறவிகள் எடுத்து, அதன்பின் மனிதப் பிறவி பெற்று, இறைவனின் அருளால் நிறைவாக இறைவனை அடைகிறோம் என்பதை இந்த ஒன்பதாம் படி உணர்த்துகிறது.

நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனின் ரூபத்திலும்,

அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியின் அவதாரங்களாகவும்,

கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியின் ரூபங்களாக நமக்கு காட்சி தருவார்.

துர்க்கையின் ஒன்பது உருவங்களை

முதல் நாளில் அன்னை மகேஸ்வரி ரூபம்
இரண்டாம் நாளன்று கௌமாரி ரூபம்
மூன்றாம் நாள் வராகி அம்மன் ரூபம்
நான்காம் நாள் மகாலட்சுமி தோற்றம்
ஐந்தாம் நாளில் வைஷ்ணவி ரூபம்
ஆறாம் நாள் இந்திராணியாக காட்சி தருவாள்
ஏழாம் நாளில் சரஸ்வதியாக அருள்வாள்
எட்டாம் நாளில் நரசிம்ஹி ரூபம்
ஒன்பதாம் நாள் சாமுண்டியாக தோற்றம்
அளிப்பார்.

நவராத்திரியில் 3,5,7,9 படிகள் கொண்ட கொலு அவரவர் நிலைக்கு ஏற்ப வைப்பது வழக்கமாகும்.


நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவமானது மனிதன் படிப்படியாக தன்னை உணர்ந்து இறைநிலையை உணரவேண்டும் இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம் ஆகும்.
இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம்.

முதலாவது படியில்,
ஓரறிவு உயிர்ப் பொருட்களான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள்
வைக்கப்படும்

இரண்டாவது படியில்
இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் வைக்கப்படும்

மூன்றாவது படியில்
மூன்றறிவு உயிர்களான எறும்பு, ஊறும் உயிரின பொம்மைகள்
வைக்கப்படும்

நான்காவது படியில்
நான்கறிவு உடைய நண்டு, வண்டு பொம்மைகள்
வைக்கப்படும்

ஐந்தாவது படியில்
ஐந்தறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள் பொம்மைகள்
வைக்கப்படும்

ஆறாவது படியில்
ஆறறிவு படைத்த மனிதர்களின் பொம்மைகள்
வைக்கப்படும்

ஏழாவதுபடியில்
மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள்
வைக்கப்படும்

எட்டாவதுபடியில்
தேவர்கள் உருவங்கள், நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக் பாலகர்கள் முதலிய பொம்மைகள்
வைக்கப்படும்

ஒன்பதாவதுபடியில்
பிரம்மா, விஷ்ணு, சிவன், மும்மூர்த்திகள் அவர் தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி பொம்மைகள் (ஆதிபராசக்தி நடுவில்)
வைக்கப்படும்

அவ்வகையில் நவராத்திரி விழாவை கொண்டாடிய அமிர்தவல்லி பெரியசாமி தம்பதியினர் இல்லத்தில் ஒன்பது படி கொலு அமைத்து, பெண்கள் பக்தி பாடல்கள் பாடி பெண்களுக்கு வெற்றிலை பாக்கு சட்டை துணியுடன் பிரசாதம் வழங்கினார்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.