*திருச்சியில் சின்ன வெங்காயம் கிலோ 100 ரூபாய் – வெங்காய மண்டி செயலாளர் தங்கராஜ் தகவல்!*
*திருச்சியில் சின்ன வெங்காயம் கிலோ 100 ரூபாய் - வெங்காய மண்டி செயலாளர் தங்கராஜ் தகவல்!*
*திருச்சியில் சின்ன வெங்காயம் கிலோ 100 ரூபாய் – வெங்காய மண்டி செயலாளர் தங்கராஜ் தகவல்!*
திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள வெங்காயம் மண்டியில் நாளொன்றுக்கு பெரிய வெங்காயம் ( மகாராஷ்டிரா கர்நாடகா )200 டன்னும் சின்ன வெங்காயம் (பெரம்பலூர், துறையூர், கோவை பகுதியில்) 100 டன் வருகிறது.
பெரிய வெங்காயத்தின் தேவை என்பது 350டன் ஆகவும், சின்ன வெங்காயத்தின் தேவை 250 டன்னாகவும் உள்ளது. சின்ன வெங்காயம் தற்போது மொத்த விற்பனையில் 100 ரூபாய் ஆகவும், சில்லரை விற்பனையில் 110 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தீபாவளிக்குள் மேலும் 20 ரூபாய் கிலோவிற்கு மொத்த விற்பனையில் உயரும் என திருச்சி வெங்காய மண்டி மொத்த விற்பனை வியாபாரிகள் சங்க செயலாளர் தங்கராஜ் தெரிவித்துள்ளார். பெரிய வெங்காயம் தற்போது 70 ரூபாய் மொத்த விற்பனையில் விற்கப்படுகிறது. ஆனால் அதுவும் 100 ரூபாயை தொடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்