Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கும்பகோணம் அருகே  வழக்குரைஞர் உள்பட இருவர்   வெட்டிக்கொலை

கும்பகோணம் அருகே  வழக்குரைஞர் உள்பட இருவர்   வெட்டிக்கொலை

0

கும்பகோணம் அருகே
வழக்குரைஞர் உள்பட இருவர்   வெட்டிக்கொலை

 

கும்பகோணம், அக். 19: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திங்கள்கிழமை இரவு வழக்குரைஞர் உள்பட இருவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
கும்பகோணம் அருகே பிளாஞ்சேரி கிளாரஸ் நகரைச் சேர்ந்தவர் பி. காமராஜ் (40). வழக்குரைஞர். அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் சி. சக்திவேல் (40). கட்டடத் தொழிலாளர். இருவரும் திங்கள்கிழமை இரவு வெளியே சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
கிளாரஸ் நகர் பகுதியில் சென்ற இருவரையும் மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதில், பலத்தக் காயமடைந்த காமராஜ், சக்திவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்த நாச்சியார்கோவில் காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தவர்கள் யார்? எதற்காகக் கொலை செய்தனர் போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து நாச்சியார் கோவில் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.