அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்ட சோழிய வெள்ளாளர் திருமண மண்டப முதலீட்டாளர்கள் கூட்டம்.
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்ட சோழிய வெள்ளாளர் திருமண மண்டப முதலீட்டாளர்கள் கூட்டம்.
சொழிய வெள்ளளர் திருமன மண்டபம் முதலீட்டாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் சோழிய வெள்ளாளர் நலச்சங்க தலைவர் மயில் வாகனம் பிள்ளை தலைமையில் சோழிய வெள்ளாளர்களுக்கு என புதிய திருமண மண்டபம் முதலீட்டாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக சுற்றுலாதுறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்டார்.
அவரிடம் சங்கத்தைச் சேர்ந்த 10 நபர்கள் முதற்கட்டமாக தலா ஒரு லட்சம் முதலீடு செய்தனர்.
கூட்டத்தில் மண்டபத்திற்கான இடம் கிரையம் பெறுதல் , கட்டிடம் அமைத்தால், இவை அமைப்பதற்காக சமுதாய மக்களிடம் இருந்து தொகை பெறும் வழிவகைகள், ஆவணங்கள் நடைமுறை படுத்துதல், இவற்றை முறையாக நிர்வாகித்தி L குழு அமைத்தல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட அனைத்து சோழிய வெள்ளாளர் சங்க பொது செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் முருகேசன் பிள்ளை, துணை தலைவர் முருகேசன் பிள்ளை, துணை செயலாளர்கள் நேருஜி பிள்ளை, ஜெகதீசன் பிள்ளை, கண்ணன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.