திருச்சி துபாய் இடையே விமான போக்குவரத்து 27 ந் தேதி தொடக்கம்.
திருச்சி துபாய் இடையே விமான போக்குவரத்து 27 ந் தேதி தொடக்கம்.
அக்டோபர் 27 முதல் நவம்பர் 30 வரை
தீபாவளி, மிலாடிநபி பண்டிகைகளை முன்னிட்டு
திருச்சி துபாய் இடையே இண்டிகோ விமான சேவை.
அக்டோபர் இறுதியில் மிலாடி நபி, நவம்பர் மாதத்தில் தீபாவளி பண்டிகைள் வருவதையொட்டி, இண்டிகோ விமான நிறுவனம், திருச்சி துபாய் இடையே சிறப்பு விமான சேவைகளை அக். 27 ஆம் தேதி முதல் இயக்குகின்றது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக, விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், உள் நாட்டு சேவைகளும், வந்தேபாரத் திட்டம் மூலம் நடைபெறும் வெளி நாட்டு விமான சேவைகள் சிலவும் திருச்சியில் நடைபெற்று வருகின்றன.
பெரும்பாலான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அக்டோபர் 30 ஆம் தேதி மிலாடிநபி, நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகைளும் வருகின்றன. இவற்றை கருத்தில் கொண்டு இண்டிகோ விமான நிறுவனம் வரும் 27 ஆம் தேதி முதல், நவவம்பர் 30 ஆம் தேதி வரை, திருச்சி துபாய் இடையே சிறப்பு விமானங்களை இயக்க முன் வந்துள்ளது.
வார நாள்களில் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் இயக்கப்படும் இந்த சிறப்பு விமானங்கள், திருச்சியிலிருந்து காலை 9.45க்கு புறப்பட்டு, பகல் 12.30 க்கு துபாய்யை சென்றடைகின்றது. எதிர் மார்க்கத்தில் பகல் 1.30 க்கு துபாய்யிலிருந்து புறப்படும் விமானம் இரவு 7.15க்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைகின்றது. இத்தகவலை திருச்சி விமான நிலைய ஆணையம் உறுதி செய்துள்ளது.