77 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டது. திருச்சி போலீசார் அதிரடி.
77 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டது. திருச்சி போலீசார் அதிரடி.
திருச்சியில் 77 இருசக்கர வாகனங்கள் பறிமுதல். ஒருவர் கைது.
திருச்சி மாநகர் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போயின. இதனை தடுக்கக் கோரியும் காணாமல் போன இருசக்கர வாகனங்களை மீட்கவும் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் முனைவர் லோகநாதன் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் குற்றம் மற்றும் போக்குவரத்து அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன் பேரில் கோட்டை குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் தனிப்படையினர் நேற்று மாலை 5.30 மணி அளவில் திருச்சி சிங்காரத்தோப்பு, மேலப்புலியூர் ரோடு, ஜங்ஷன் பகுதிகளில் இருசக்கர வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்தபோது மெயின் கேட் வழியாக ஹீரோ ஹோண்டா கிளாமர் (TN 48 AV 8762) வாகனத்தில் வந்த
ராஜ்குமார் (வயது 51) த/பெ. வைத்தியநாதன், 15/A, வடக்குத்தெரு, மேலமருதூர், திருத்துறைப்பூண்டி தாலுகா ,திருவாரூர் மாவட்டம்.
நபரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறினார். அவர் ஓட்டி வந்த வாகனம் 22.9.20 இன்று காணாமல் போனதாக கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது ஆகும்.
நேரம் அவரை விசாரிக்கையில் தான் கோட்டை காவல் நிலைய பகுதியிலும், திருச்சி மாநகர பகுதியிலும், ஸ்ரீரங்கத்திலும், மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் சுமார் 40 லட்சம் மதிப்புள்ள 77 இரு சக்கர வாகனங்களை திருடி உள்ளதாகவும் ஒப்புக்கொண்டார்.
நேற்று கைது செய்யப்பட்ட உடன் அவர் திருடி மறைத்து வைத்திருந்த இருசக்கர வாகனங்களை அந்தந்த பகுதிக்கு சென்று அடையாளம் காட்டினார்.
கைப்பற்றப்பட்ட 77 இருசக்கர வாகனங்களையும் திருடிய ராஜ்குமாரையும் இன்று நீதித்துறை காவலுக்கு உட்படுத்தப்பட்டது.
கோட்டை காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 77 இருசக்கர வாகனங்களையும் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் முனைவர் லோகநாதன் பார்வையிட்டார்.