அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆயிரம் குடும்பத்திற்கு கொரோனா நிவாரண உதவி.
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆயிரம் குடும்பத்திற்கு கொரோனா நிவாரண உதவி.
திருச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படும் வகையில் கொரோனா நல திட்ட உதவிகள் : அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பாலக்கரை பகுதியில் மல்லிகைபுரம், துரைசாமிபுரம், எடத்தெரு, கீழப்புதூர், இருதயபுரம், அன்னை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், 5 கிலோ அரிசி, ஒருவாரத்திற்கு தேவையான காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்பினை சுற்றுலாத்துறை அமைச்சரும், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.
முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் அருள்ஜோதி, ஜாக்குலின், பகுதி செயலாளர்கள் மலைக்கோட்டை அன்பழகன், கருமண்டபம் ஞானசேகர், ஏர்போர்ட் விஜி, கூட்டுறவு வங்கி இயக்குனர் கருமண்டபம் பத்மநாதன், டிபன் கடை கார்த்திகேயன், முன்னாள் கவுன்சிலர் மகாலட்சுமி மலையப்பன், வெல்லமண்டி ஜவகர்லால் நேரு, சிந்தை முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.