திருச்சிராப்பள்ளி சைக்கிள் ஓட்டுவதில் திருச்சி மக்களின் ஆர்வத்தை அறிய கணினி வலைத்தளம் வாயிலாக கருத்துக் கணிப்பு
ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் தகவல்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ், இருசக்கர மிதிவண்டிகள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையில், Cycle for Change Challenge 2020 ஜூன் 25 அன்று மத்திய அரசு நகர்புற வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகார அமைச்சகம் சார்பில் தொடங்கப்பட்டது. சைக்கிள் ஓட்டுவதால் காற்று மாசுபாட்டினை குறைப்பதற்கும், சுற்றுப்புற நட்புச் சூழலை உருவாக்குவதற்கும், தூய்மையான மற்றும் ஆரோக்கியமான போக்குவரத்து முறையைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதற்கும், இதன் மூலம் வேலைகள், கல்வி மற்றும் அத்தியாவசிய சேவைகளை பாதுகாப்பாக அணுகுவதை உறுதி செய்வதற்கும் துவக்கப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி சைக்கிள் ஓட்டுவதில் திருச்சி மக்களின் ஆர்வத்தை அறிய கணினி வலைத்தளம் வாயிலாக கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுவருகிறது. எனவே, கீழேயுள்ள வலைத்தள முகவரி அல்லது கியூஆர் குறியீடு ஸ்கேனிங் செய்வதன் மூலம் பொதுமக்கள் தங்களது பதிவுகளை உள்ளீடு செய்யுமாறு மாநகராட்சி ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் கேட்டுக்கோண்டார்.
இணைப்பு: https://forms.gle/LcSS3ca7gtSQN7tP8