குலசேகரப்பட்டினம் தசரா விழா விதிமுறைகள்
குலசேகரப்பட்டினம் தசரா விழா குலசேகரப்பட்டினம் தசரா விழா விதிமுறைகள்
இந்தியாவிலேயே மிகவும் பிரபலமான இந்துக்களின் நிகழ்ச்சிகளில் ஒன்று தசரா நிகழ்ச்சியாகும். பெங்களூரில் மிகச்சிறப்பாக நடைபெறும்.
அதே போன்று தமிழகத்தில் திருச்செந்தூர் மாவட்டம் குலசேகரபட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது தசரா. இந்நிகழ்ச்சியில் வருடா வருடம் இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்..
இந்த வருடம் நாளை மறுநாள் (10.10.2020) தொடங்க உள்ள தசரா விழாவிற்கு கொரானா வைரஸ் பரவலை தொடர்ந்து இந்த முறை தசரா விழா கொண்டாட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பக்தர்கள் அனுமதி குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
* திருவிழாவின் 1 வது, 10 வது நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் நாள் ஒன்றுக்கு 8 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் தரிசனம் செய்ய அனுமதி.
* திருக்கோவில் விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறும் .
* கடற்கரையில் எந்தவிதமான நிகழ்வுகளும் நடைபெறாது..
* சூரசம்கார நிகழ்ச்சியானது கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறும்.
* வெளி மாநிலத்தவர், வெளி மாவட்டத்தினர் கலந்துகொள்ள அனுமதி இல்லை என்றும்,
* வேடம் அணிந்த பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதி இல்லை .
* பதிவு செய்யப்பட்ட தசரா குழுக்களுக்கு மட்டும் காப்புகள் வழங்கப்படும் .
* பதிவு செய்யப்பட்ட தசரா குழுக்களில் இருவர் மட்டுமே காப்பு வாங்க அனுமதி.
* பதிவு செய்யாதவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் ஏற்பாடுகள் செய்யப்படும் .
வேஷம் அணியும் பக்தர்கள் அவரவர் ஊரிலேயே அணிந்து கொள்ள வேண்டும்.